Monetize Your Website or Blog

Monday, 4 July 2016

காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! இது தெலங்கானாவில்!


காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா, மாநிலம், அதிபாத் மாவட்டம், பைன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சருபாய். இவரது மகள் சந்தியா (18) பீடி சுற்றும் வேலை செய்து வந்தார்.



இவர்களது பக்கத்து வீட்டில் மகேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த அவர், கடந்த ஒரு ஆண்டாக சந்தியாவை ஒருதலையாக காதலித்து இருக்கிறார். இதை பல்வேறு சந்தியாவிடமும் கூறியிருக்கிறார். ஆனால், சந்தியா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (2-ம் தேதி) தனது வீட்டுக்கு அருகே இருந்த கடைக்கு சந்தியா சென்றிருக்கிறார். அப்போது மகேஷ், தன்னை காதலிக்குமாறு கூறியிருக்கிறார். அதற்கு சந்தியா, எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் வராதே என்று கூறினாராம். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று, அவரது கழுத்தை அறுத்திருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேஷை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை மகேஷ் போலீசில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment