Monetize Your Website or Blog

Friday, 1 July 2016

விக்ரம் மகளுடன் பேரனுக்கு திருமணம் நிச்சயமானது எப்படி...?- நெகிழும் மு.க. முத்துவின் துணைவியார்!


திமுக தலைவர் கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் மகளும், மு.க.முத்துவின் துணைவியாருமான சிவகாம சுந்தரியிடம் பேசினோம். 



''சிவாஜியின் முதல்படமான  ' பராசக்தி'யில் அவருக்கு முதன்முதலாக குரல்கொடுத்து, 'கா.. கா..' பாடலை பிரபல பாடகரான என் தந்தையார் சி.எஸ் ஜெயராமன்தான் பாடினார். எனக்கு திருமணம் நடந்தபோது எம்.ஜி.ஆர், சிவாஜி என கலையுலகின் அத்தனை பிரபலங்களும் வந்து வாழ்த்தினாங்க. அப்போது எம்.ஜி.ஆர்,  திமுகவில்  இருந்தார். எனது மகள் தேன்மொழியை, கடலூரில் சி.கே. ரெங்கநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ரெங்கநாதனின் தந்தையார் சின்னி கிருஷ்ணன் பிரபல தொழிலதிபர். 

இந்தியாவில் முதன்முதலாக 'சிக் ஷாம்பு' என்கிற பாக்கெட்  ஷாம்பை அவர்தான் அறிமுகம் செய்தார். என் பேத்தி அமுதா அமெரிக்காவில படித்தபோது, அவருடன் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவும் படிச்சாங்க.  இந்தியா வரும்போது, கிழக்கு கடற்கரை சாலையில இருக்குற என் மகள் வீட்டுக்கு அக்‌ஷிதா  சில சமயங்கள்ல வந்திருக்கு.  கவின்கேர் கம்பெனியை கவனிச்சுட்டு இருந்த என் பேரன் மனு ரஞ்சித்,  மேற்கொண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க அமெரிக்காவுக்குப் போனார். அப்போதுதான் பேத்தி அமுதாவோட தோழி அக்‌ஷிதாவும் ரஞ்சித்துக்கும் அறிமுகம் ஆனாங்க. நண்பர்களா பழகியிருக்காங்க.
ஒரு கட்டத்தில் என் பேரன் ரஞ்சித்தை, விக்ரம் குடும்பத்துக்கும் பிடிச்சுப் போச்சு. எங்களுக்கும் அக்‌ஷிதாவின் குணங்கள் பிடிச்சுப் போனதால், ஏன் இருவருக்கும் திருமணம் செய்துவைக்ககூடாதுன்னு தோணிச்சு. இரண்டு குடும்பமும் பேசினோம். திருப்திகரமா இருந்தது. திருமணத்தை முடிவு செஞ்சிட்டோம்.



ஜூலை 10-ம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் மனு ரஞ்சித் - அக்‌ஷிதா நிச்சய தாம்பூலம் நடக்குது. நிச்சயத்துக்கு மாமா (கருணாநிதி) மற்றும் உறவினருங்க எல்லாரும் வருவாங்க” என்று பேரன் திருமணம் குறித்து நெகிழ்கிறார் சிவகாம சுந்தரி.


No comments:

Post a Comment