Monetize Your Website or Blog

Friday, 22 July 2016

முதல் டெஸ்டில் இந்தியா அசத்தல்! கோலி சதம், தோனி சாதனை சமன்!


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்திலேயே முரளி விஜய், புஜாரா வெளியேற தவானுடன் இணைந்தார் கோலி. இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்க்க இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.


மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவான் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு அவர்களுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 

134 பந்துகளை சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தனது 12வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே ஆட்டமிழந்ததால் நைட் வாட்ச்மேனாக  களமிறக்கப்பட்ட அஷ்வின் சிற‌ப்பாக ஆடி 22 ரன்களுடனும், சதமடித்த கோலி 143 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 302/4 என்ற நிலையில் உள்ளது.


முதல் நாள் ஆட்டத்தின் புள்ளிவிவரங்கள்:

1. மேற்கிந்திய தீவுகளில் சதமடித்த மூன்றாவது இந்திய கேப்டன் விராட் கோலி. இதற்குமுன் கபில்தேவ் 100 ரன்களும், ட்ராவிட் 146 ரன்களும் குவித்துள்ளனர். இன்னும் நான்கு ரன்கள் குவித்தால் கோலி மேற்கிந்திய தீவுகளில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

2. கேப்டனாக 1000 ரன்களை 18 இன்னிங்க்ஸ்களில் கடந்துள்ளார் கோலி. இதன் மூலம் குறைந்த இன்னிங்க்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்ததில் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளார் கோலி.

3. மேற்கிந்திய தீவுகளில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இரண்டாவது இந்திய வீரர் கோலி. இதற்குமுன் சேவக் 180 ரன்களை குவித்திருந்தார்.  மேலும் கேப்டனாக வெளி நாட்டில் கோலியின் 5வது சதம் இது.  இதன் மூலம் அசாருதின் சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.



No comments:

Post a Comment