சேலம் அருகே சமையல் பாத்திரத்திற்குள் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நரபலிக்காக செய்யப்பட்ட கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தெளுங்கனூரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் மோகனவள்ளி (8). நேற்று (3-ம் தேதி) இரவு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மோகனவள்ளி, திடீரென காணாமல் போனார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மோகனவள்ளி வீட்டின் அருகேயுள்ள திருமூர்த்தி என்பவரின் வீட்டின் முன்பு நின்றதாகவும், அதன் பின்னர்தான் காணாமல் போனதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திருமூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, ஒரு சமையல் பாத்திரத்திற்குள் சிறுமி மோகனவள்ளியின் சடலம் இருந்தது.
அந்த பாத்திரத்தைச் சுற்றிலும் குங்கும் சிதறி கிடந்ததால், இதனால், நரபலிக்காக சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, திருமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment